ஷென்ஜென்-ஹாங்காங் புதிய நுழைவாயில் திறப்பு

7 ஆண்டுகால மறுசீரமைப்பு பணிகளுக்குப் பிறகு அக்டோபர் 12ஆம் நாள் காலை 6:30 மணிக்கு, ஷென்ஜென் மற்றும் ஹாங்காங்கை இணைக்கும் புதிய ஹுவாங்காங் நுழைவாயில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. ஒரே இடத்திலும், ஒரே செயல்முறையிலும், இரு தரப்புகளின் சோதனை நிறைவேற்றம் என்ற புதிய சுங்க அனுமதி வழிமுறையை இத்துறைமுகம் செயல்படுத்துகிறது. இதன் மூலம், பயணிகளுக்கான சுங்க அனுமதி சோதனைகளுக்கான கால அளவு முந்தைய 30 நிமிடங்களிலிருந்து 5 நிமிடங்களாகக் குறைந்துள்ளதோடு, எல்லை கடக்கும் பயணம் வசதியாகியுள்ளது.

குவாங்டோங்-ஹாங்காங்-மக்காவ் பெரிய வளைகுடாப் பகுதியின் கட்டுமானத்தை ஊக்குவிக்கவும், ஹெடாவ் ஷென்ஜென்-ஹாங்காங் அறிவியல் புத்தாக்க ஒத்துழைப்பு மண்டலத்திற்குச் சேவைபுரியவும் செயல்படும் மாதிரி திட்டமான ஹுவாங்காங் நுழைவாயில், சீனத் தேசிய அளவிலான அறிவார்ந்த நுழைவாயில் கட்டுமானத் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 லட்சத்து 89 ஆயிரத்து 700 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்நுழைவாயில், தற்போது உலகளவில் மிகப்பெரிய தரைவழி நுழைவாயில் ஆகும்.

You May Also Like

More From Author