இயக்குனர் பா ரஞ்சித், தான் எழுதி முடித்த சார்பட்டா 2 படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து உற்சாகமாகப் பேசினார்.
இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், அவரது தற்போதைய படமான வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், சார்பட்டா 2 தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சார்பட்டா திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் நடிப்பில் வெளியானது.
கொரோனா காலத்தின் காரணமாக ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம், பெரிய அளவில் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது.
அரசியல் மற்றும் குத்துச்சண்டை கலந்த இந்தப் படத்தின் முதல் பாகம், அதன் நம்பகத்தன்மை மற்றும் கதாபாத்திரங்களுக்காகப் பெரிதும் பேசப்பட்டது.
இயக்குனர் பா ரஞ்சித் சார்பட்டா 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல்
