70 ஆண்டு வரலாற்றைக் கொண்ட சீன இறக்குமதி ஏற்றுமதி பொருட்காட்சி

140ஆவது சீன இறக்குமதி ஏற்றுமதி பொருட்காட்சியில் புதிய உயர் தர உற்பத்தி திறன் சார்ந்த பல பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டன.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், தனது வாழ்த்து கடிதத்தில் கூறும் போது,

கடந்த 70 ஆண்டுகாலத்தில், சீன அந்நிய வர்த்தகத்துக்கு இந்த பொருட்காட்சி முக்கிய பங்காற்றியுள்ளது. சீனா உயர் நிலை திறப்புப் பணியை விரிவாக்கி, திறப்புதன்மை வாய்ந்த உலக பொருளாதாரத்தைக் கட்டியமைக்கும் முக்கிய மேடையாக இது மாறியுள்ளது என்று கூறினார்.

140ஆவது சீன இறக்குமதி ஏற்றுமதி பொருட்காட்சியின் முதல் கட்டம் முன்னேறிய உற்பத்தி தொழிலில் கவனம் செலுத்துகின்றது. வீட்டுப்பயன்பாட்டு மின் சாதனம், தொழிற்துறை உற்பத்தி, விலக்கு மின் சாதனம், வாகனம் முதலிய 5 துறைகளைச் சேர்ந்த புத்தாக்க முடிவுகள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

இப்பொருட்காட்சி, வர்த்தகங்களுக்கு ஊக்கமளிப்பதோடு, உலகிற்கு புத்தாக்க மற்றும் ஒத்துழைப்பு ஆற்றலை ஊட்டியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author