உலகத் தரவு அமைப்பு மார்ச் 30ம் நாள் பெய்ஜிங்கில் நிறுவப்பட்டது. தரவுகள் சார்ந்த சர்வதேச ஒத்துழைப்பை ஆழமாக்கி, உலகத் தரவுகளின் மேலாண்மையை மேம்படுத்துவதற்கு அது சிறப்பு மேடையை வழங்குகிறது.
இந்த அமைப்பு பெய்ஜிங்கில் நிறுவப்பட்டதன் காரணங்கள் குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், இது, சீனாவின் தரவுகள் வளர்ச்சி மற்றும் தரவு மேலாண்மை நிலையை அங்கீகரிப்பதோடு, சர்வதேச சமூகத்தின் பொது எதிர்பார்ப்புக்கும் பொருந்தியது. 2025ம் ஆண்டில் சீனாவில் தரவுகள் கையிருப்பின் மொத்த அளவு, உலகில் 27.8 விழுக்காடு வகித்து உலகின் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதி வரை, சீனாவின் இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை, 112.5 கோடியை எட்டி, உலகளவில் முதலிடம் வகித்தது. மேலும் எண்ணியல் அடிப்படை வசதிகள் மற்றும் பயன்பாட்டில் சீனா முன்னணியில் உள்ளது. அதனால் தரவுகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு துறையில் சீனா, உலகத்துடன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
