சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் 28ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கேள்விக்கு பதிலளிக்கையில், ஜப்பானின் இராணுவவாதம் ஆக்கிரமிப்பு போருக்கு ஆன்மீக கருவி மற்றும் சின்னமாகப் பயன்படுத்தும் யாசுகுனி கோவில், உண்மையிலேயே போர்க் குற்றவாளிகளின் கோவில் ஆகும் என்றார். யாசுகுனி கோவில் தொடர்பாக ஜப்பான் மேற்கொண்டுள்ள தொடர் எதிர்மறையான செயல்கள், வரலாற்று நீதியையும் மனித மனசாட்சியையும் கடுமையாக மீறி, இரண்டாம் உலகப் போரின் வெற்றிக்கான சாதனைகளுக்கும் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கிற்கும் சவால் விடுத்துள்ளன. இது குறித்து சீனா பேராத்திரம் அடைந்து கடும் கண்டனம் வெளிப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.
