தென் கொரிய அரசுத் தலைவர் லீ ஜே-மியுங்கின் அழைப்பையேற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 30ஆம் நாள் முதல் நவம்பர் முதல் நாள் வரை தென்கொரியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இப்பயணத்தின் போது அவர் தென் கொரியாவின் கியோங்ஜு நகருக்குச் சென்று ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 32ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 24ஆம் நாள் தெரிவித்தார்.
