பங்களாதேஷில் கொழுந்துவிட்டு எரியும் வன்முறை: மாணவர் தலைவர் மறைவால் பதற்றம்  

Estimated read time 1 min read

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த வங்கதேச மாணவர் போராட்ட குழுவின் முன்னணி தலைவர் ஷரீப் உஸ்மான் ஹாடியின் மரண செய்தி வெளியானதை தொடர்ந்து, வங்கதேசம் முழுவதும் போராட்டங்களும் வன்முறையும் வெடித்துள்ளன.
குறிப்பாக, இந்திய எதிர்ப்பு உணர்வு மேலோங்கியுள்ளதால் அந்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஹாடியின் மரணச் செய்தி பரவியதும் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், டாக்காவில் உள்ள முன்னணிப் பத்திரிகைகளான ‘புரதோம் ஆலோ’ மற்றும் ‘டெய்லி ஸ்டார்’ ஆகியவற்றின் அலுவலகங்களை முற்றுகையிட்டு தீ வைத்தனர்.
இந்தப் பத்திரிகைகள் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பல ஊழியர்கள் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்கப் போராடினர்.

You May Also Like

More From Author