இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்கா அளித்த அழுத்தம் உள்ளிட்ட விவகாரங்களால், இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், இந்தியாவுடன் இதுவரை இல்லாத வகையில் மாறுபட்ட வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகக் கூறினார். மேலும், இந்தியாவும் அமெரிக்காவும் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
