காவலர் நினைவு தினம் என்பது சவாலான சூழல்களிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் காவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய காவலர் நினைவு தினத்தையொட்டி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது முதல் குற்றச் செயல்களைத் தடுப்பது வரை காவலர்களின் பங்களிப்பு ஈடு இணையற்றது என குறிப்பிட்டுள்ளார்.
அவசர காலங்களில் விரைந்து செயல்பட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரமிக்க காவலர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், காவலர்களின் துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் ஆகியவை என்றென்றும் நினைவுகூரப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
