இந்தியா – பாகிஸ்தான் உறவைத் தனித்தனியாகவே பார்ப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மார்கோ ரூபியோ, மும்பையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் அளித்த பேட்டியில், பாகிஸ்தானுடனான உறவு மூலம் இந்தியாவுக்கு கவலை அளிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்கவும், இரு நாடுகளுக்கு இடையிலான மோதல்களைத் தவிர்க்கவும் முடியும் என்றார்.
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது சிக்கலானது என்றும் ரூபியோ குறிப்பிட்டார்.
