அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் பிப்ரவரி 10ஆம் நாள் கையொப்பமிட்ட அரசாணையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இரும்புருக்கு மற்றும் அலுமினியங்களின் மீது 25 விழுக்காடு சுங்க வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட விமர்சனத்தில், அமெரிக்காவின் இந்தச் செயல், பல துறைகளில் வர்த்தகப் போட்டியை உருவாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த நாடுகளின் நலன்களை எந்தவித சமரசமும் இன்றி பேணிக்காக்கும் என்று கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. டொனல்ட் டிரம்பின் கடந்த பதவிக்காலத்தில், வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரும்புருக்கு மற்றும் அலுமினியங்களின் மீது அமெரிக்கா பெரும் சுங்க வரியை வசூலித்துள்ளது.
இதற்கு, அமெரிக்காவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரும்புருக்கு மற்றும் அலுமினியங்களின் மீது அமெரிக்கா 2018-ஆம் ஆண்டு கூடுதல் சுங்க வரியை வசூலிப்பது, உலக வர்த்தக அமைப்பின் தொடர்புடைய விதிகளை மீறியதாக இந்த அமைப்பு 2022-ஆம் ஆண்டின் டிசம்பர் திங்கள் தெரிவித்தது.
2025-ஆம் ஆண்டு, இரும்புருக்கு மற்றும் அலுமினியத் துறையில், அமெரிக்கா மீண்டும் வர்த்தக போட்டியைத் உருவாக்கியுள்ளது, உலக வர்த்தக அமைப்பின் தீர்ப்பைப் பொருட்படுத்தாமல், சர்வதேச வர்த்தக ஒழுங்கைக் கடுமையாக சீர்குலைத்து, தனது மேலாதிக்கவாதத்தை மறுபடியும் வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், இது முழு உலகின் வினியோக சங்கிலியையும் கடுமையாகப் பாதிக்கும்.