“அடுத்த 30 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வராது!” – டெல்லியில் அமித்ஷா ஓபன் டாக்..!

Estimated read time 0 min read

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா யமுனை சுத்தம் செய்வதற்காக ரூ.8,941 கோடி திட்டங்களை துவங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமித்ஷா, பேசியதாவது:

நான் சொல்வது உங்களுக்கு கேட்காது என்று எனக்கு தெரியும். நீங்கள் வெளிநாட்டில் எங்கே அமர்ந்திருக்கிறீர்கள். அதற்கான காரணத்தை நீங்கள் விளக்க கூட இல்லை. ஆனால் பரவாயில்லை.அது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை. நீங்கள் டில்லிக்கு வந்த உடன் நான் சொல்வதை கேளுங்கள்; அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீங்கள் ஆட்சிக்கு வர மாட்டீர்கள்.

காங்கிரஸ் கட்சியால் அதன் எதிர்மறை அரசியல் காரணமாக 2030ம் ஆண்டுக்குள் கூட தேர்தலில் வெற்றி பெற முடியாது.ஊடுருவல்காரர்களின் ஓட்டு வங்கியை பாதுகாப்பதற்காக மட்டுமே ராகுல் ஓட்டு திருட்டு என்ற பொய் குற்றச்சாட்டை எழுப்பி வருகிறார். பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் பல்வேறு மாநிலங்களில் ஆட்சிக்கு வர முடியவில்லை.

பஞ்சாபில் ஆம்ஆத்மி அரசை வேரோடு பிடுங்கி எறிவதன் மூலம் கெஜ்ரிவாலுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.நீங்கள் போராட்டம் நடத்துவதன் மூலம் மட்டுமே அரசியல் செய்யாதீர்கள். டில்லியில் நீங்கள் ஆட்சியில் இருந்த போது குவிந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. மிக குறுகிய காலத்தில் குப்பை கிடங்குகள் அகற்றப்பட்டு பூங்காக்கள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்

Please follow and like us:

You May Also Like

More From Author