பிரதமர் மோடியின் பயண திட்டத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, “காலை சூரிய நமஸ்காரம் செய்யும் பிரதமர் மோடி தியானத்தை தொடர்கிறார்” என்றும்,
“மதியம் ஒரு மணி அளவில் 3 நாள் தியானத்தை முடித்து கொள்ளும் மோடி, மீண்டும் சுவாமி விவேகானந்தரை தரிசனம் செய்துவிட்டு, ஸ்ரீபத மண்டபத்திலும் தரிசனம் செய்கிறார்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தனி படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்று திருவள்ளுவரின் பாதத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தும் மோடி, பின்னர் அங்கிருந்து படகு மூலம் படகு துறைக்கு செல்கிறார்” எனவும்,
“அங்கிருந்து கார் மூலம் கடற்கரை சாலையில் உள்ள காந்தி நினைவு மண்டபத்திற்கு சென்று, அங்கு மகாத்மா காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள அஸ்தி கட்டத்தில் மலர் தூவி மரியாதை செய்கிறார்” எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“பின்னர், கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் மோடி, அங்கு தயார் நிலையில் உள்ள ஹெலிகாப்படரில் திருவனந்தபுரம் செல்கிறார்” எனவும், “அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.