இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் கேப்டன் ஸ்மித் மச்சாருடன் இணைந்து தீபம் ஏற்ற வருமாறு பிரதமர் மோடிக்கு நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா – இஸ்ரேல் இடையிலான இருதரப்பு உறவுகளின் நிலையான வளர்ச்சி மற்றும் மேற்காசியாவில் அமைதியை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து போராடி வருவதாக கூறியுள்ளார். மேலும், இஸ்ரேல் சுதந்திர தின விழாவில், இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இணைந்து தீபம் ஏற்றி வைக்குமாறும் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
