சீன அறிவியல் தொழில் நுட்பம் கொண்டு வரும் வளர்ச்சி வாய்ப்புக்கள்

ட்சொங்குவான்சுன் மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் சமீபத்தில் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர் கண்ணாடி, மனித உருவ ரோபோ, இயந்திர செல்லப்பிராணிகள் முதலியவை காண்பிக்கப்பட்டன. 560 வகை முன்னணி அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகள், 10 ஆயிரம் சதுர மீட்டருள்ள கண்காட்சி அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் பங்கெடுத்த ஐ.நாவின் யுனெஸ்கோ பெய்ஜிங் அலுவலகத்தின் தலைவர் முனைவர் ஷாபாஸ் கான் செய்தியாளர்களுக்குக் கூறுகையில்,

15ஆவது ஐந்தாண்டு திட்டம் மிகவும் அற்புதமான வளர்ச்சி நெகுநோக்குத் திட்டமாகும். அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி இதில் முக்கியமாக வகுக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு அல்லது தொழில் துறை ராபோ உற்பத்தி போன்ற புதிய தர உற்பத்திப் பொருட்கள் துறையின் உற்பத்தி ஆற்றல் பெரிதும் மேம்படுத்தப்படும். அதே வேளையில், மின்சார வாகனங்கள், தொலை தொடர்பு உள்ளிட்ட துறைகளிலும் புதிய வளர்ச்சி வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author