உலக தலைவர்களுடனான சந்திப்பை ராகுல்காந்தி விமர்சித்திருந்த நிலையில் இந்திரா காந்தியை உதாரணம் காட்டி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்திய வருகை தந்த போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை மும்பையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சம்மன் என விமர்சித்திருந்த நிலையில் அதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுக்கும் விதமாக பேட்டியளித்தார்.
கடந்த 1972ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி டெல்லிக்கு வெளியே சந்தித்தார். அப்படி என்றால் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதா என ஜெய்சங்கர் கேள்வி எழுப்பினார்.
