நாடாளுமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக தீர்மானம்? – ஓம் பிர்லா விளக்கம்!

Estimated read time 0 min read

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் தீர்மானம் கொண்டு வந்தால் விதிமுறைகளின்படி பரிசீலிக்கப்படும்,” என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் அவருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் ஓம்பிர்லா, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக இதுவரை யாரும் முறையாக நோட்டீஸ் சமர்பிக்கவில்லை எனவும் அவ்வாறு வழங்கினால் அரசியலமைப்பு விதிமுறைகளின் படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author