நீண்டகாலமாக சுயக் கட்டுப்பாடு இல்லமால், சிறு நோய்களை அலட்சியம் செய்தால், வலிமையான உடலிலும் படிப்படியாக மறைவான ஆபத்துகள் ஏற்படும். நீண்டகாலமாக ஆளும் கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சி என்பது, கட்சி கட்டமைப்பின் வழக்கமான பணியாகும்.
சுய ஆட்சி பற்றிய இந்த அறிவுத்திறமை, சீனாவின் சிறந்த பாரம்பரிய பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. சீன மூதாதையர்களின் பார்வையில், ஆட்சியாளர்கள் முனைப்புடன் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் தான், பொது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதோடு, நீண்டகால அமைதி மற்றும் நிலைத்தன்மையையும் நனவாக்க முடியும். கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியானது, சீனப் பாரம்பரிய ஆட்சிமுறையின் அறிவுத்திறமையை நவீனமயமாக்க முறையில் பரவல் செய்து புதுமையாக்கியுள்ளது.
உலகளவில் பல ஆளும் கட்சிகள், அதிகாரத்துவத்தின் சோம்பேறித்தனம், அதிகாரம் துவக்க நோக்கத்திலிருந்து விலகல், மக்களிடமிருந்து விலகல் உள்ளிட்ட பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும். கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியானது, இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முக்கிய வழிமுறையாகும். 2014ஆம் ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இக்கருத்தை முன்வைத்தார். 2022ஆம் ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டில், கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியின் அமைப்புமுறை முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 5வது முழு அமர்வில், கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியை உறுதியுடன் முன்னேற்றுவதற்கான பணிகள் ஏற்பாடு செய்யப்படும். கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சி, தற்காலிக நடவடிக்கை அல்ல. இது சீனப் பாணி நவீனமயமாக்கத்தைப் பேணிக்காப்பதற்கான நீண்டகால நெடுநோக்குத் திட்டமாகும்.
