சீனச் செம்படையின் நீண்ட பயணம் வெற்றி பெற்றதன் 90ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் மாநாடு அக்டோபர் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் இம்மாநாட்டில் உரைநிகழ்த்தியபோது, வரலாற்றை மனதில் ஆழப்பதித்தால் மட்டுமே எதிர்காலத்தைப் படைக்க முடியும் என்று தெரிவித்தார்.
1934ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் 1936ஆம் ஆண்டின் அக்டோபர் வரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான செம்படை பத்துக்கு மேற்பட்ட மாநிலங்கள் வழியாக, சுமார் 12500 கிலோமீட்டர் தூரமாக பயணித்து, பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட எதிரிப் படைகளின் முற்றுகையையும் அடக்குமுறையையும் முறியடித்து, ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்காக சீனாவின் வடக்குப் பகுதிக்கு தந்திரமாக இடத்தை மாற்றியது. இதன் மூலம் சீனப் புரட்சியில் ஒரு புதிய நிலைமை உருவாகியது.
90ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது வளர்ச்சிக்கான புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள சீனா, பன்முகங்களிலும் ஒரு நவீன சோஷலிச நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், இரண்டாவது நூற்றாண்டு இலக்கை அடைவதற்கும் அர்ப்பணித்து வருகின்றது.
இலட்சியத்தை நனவாக்குவதற்கான பாதை ஒருப்போதும் சுமுகமானதாக இருப்பதில்லை. தற்போது நிலையற்ற தன்மை அதிகரித்து வருவதால், உலகம் கடந்த 100 ஆண்டுகளஇல் காணாத மாற்றங்களைக் கண்டு வருகிறது. சுங்கவரி மற்றும் வர்த்தகப் போர்களை உறுதியுடன் சமாளிப்பது முதல் உயர் மட்ட தொழில்நுட்பத் துறையில் சுய வளர்ச்சி அடைவது வரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் மக்களும் போராட்டத்தில் தைரியத்தையும் திறமையையும் வெளிப்படுத்தி, சவால்களை எதிர்கொண்டு, உலகிற்கு புதிய வழிகளை காட்டி வருகின்றது. இது குறித்து ஸ்பேனிஷ் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜோசி லூயிஸ் சென்டெல்லா கோமஸ்(José Luis Centella Gomez)அண்மையில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், சீனச் செம்படையின் நீண்டப் பயணமானது தற்போதைய உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்கள், உறுதியற்ற தன்மையைச் சமாளிக்கும் திறன் ஆகும். நெடுநோக்கு ரீதியான திசையைப் பேணும்போது உத்திசார்ந்த வளைந்து கொடுக்காத தன்மைகளை தவிர்க்க வேண்டும். நீண்டகால இலக்குகளைக் கடைப்பிடிக்கும்போது, எதார்த்த மாற்றங்களுக்கு ஏற்ப பாதையைச் சரிசெய்ய வேண்டும். பின்னடைவுகளை எதிர்கொள்ளும்போது மீள்திறனுடன் இருக்கவும், கருத்து வேறுபாடுகளுக்குள் ஒத்துழைப்பை நாடவும் வேண்டும் என்று இந்த கற்றுக்கொள்ளத்தக்க அம்சங்களில் இடம்பெற்றுள்ளன என்று தெரிவித்தார்.
