நட்பு ரீதியான பரிமாற்றங்களுக்கான சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றக்கூட்டத்தில் கலந்து கொள்ள சீனாவுக்கு வந்துள்ள கென்யா தேசிய பேரவையின் தலைவர் வெடாங்குலா அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆப்பிரிக்காவின் புதிதாக வளரும் நாடுகளின் நெருங்கிய நண்பராக சீனா திகழ்கிறது. உலகளாவிய தெற்கு நாடுகள், மத்திய தரை கடலோர நாடுகள், ஆசிய நாடுகள், தென் அமெரிக்கா நாடுகள் ஆகியவற்றைச் சேர்ந்த நண்பர்களும் இம்மன்றக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். எங்கள் பார்வையில், சீனா மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. சமூக வளர்ச்சி, பொருளாதார அதிகரிப்பு, தொழில்மயமாக்கம், உற்பத்தித் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், சீனாவின் பல அனுப்பவங்கள் கற்றுக்கொள்ளப்படத்தக்கவை என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் வழிக்காட்டலுடன், சீன-கென்யா உறவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்புகள் செழுமையான சாதனைகளைப் பெற்று, இரு நாட்டு மக்களின் நலன்களைப் பெரிதும் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டின் ஏப்ரல் திங்கள், இரு நாட்டுறவு, புதிய யுகத்தில் சீன-கென்யா பொது எதிர்காலச் சமூகம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. இது குறித்து வெடாங்குலா கூறுகையில், இரு நாட்டுறவு உயர்நிலைக்குக் கொண்டு செல்லப்படுவதன் மூலம், கென்யா மேலும் உயர் ஒத்துழைப்பு மேடையில் உள்ளது. சீனாவின் பொருளாதாரம், தொழில் நுட்பம், நிறுவன கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் அனைத்து பயனுள்ள சாதனைகளையும், கென்யா கற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
