சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 5ஆவது முழு அமர்வு அக்டோபர் 26முதல் 29ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது. இதில், கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிமுறைக்கான பணியை விடாமுயற்சியுடன் முன்னேற்றுவதில் தொடர்புடைய முக்கிய பிரச்சினைகளை ஆராய்வதில் முக்கியமாக கவனம் செலுத்தப்படும். சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் முழு அமர்வு என்பது, சீனாவின் கொள்கை திசையையும் தேசிய வளர்ச்சி நெடுநோக்கையும் உற்று அறிந்து கொள்வதற்கான முக்கிய ஜன்னலாக திகழ்கின்றது.
ஆளும் கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 5ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தி, புதிய மத்திய கமிட்டியைத் தேர்ந்தெடுகின்றது. முழு அமர்வுக்குப் பின், மத்தியக் கமிட்டியின் முழு அமர்வுகளை நடத்துவது மூலம், கட்சி மற்றும் நாட்டின் முக்கிய விஷயங்களை ஆராய்ந்து திட்டமிடுகிறது.
நடைபெற உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்தியக் கமிட்டியின் ஐந்தாவது முழு அமர்வு, வழக்கமான அமர்வுகள் போல ஐந்தாண்டுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளை மீளாய்வு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக, கட்சியின் விரிவான மற்றும் கண்டிப்பான ஆட்சிமுறையை விடாமுயற்சியுடன் முன்னெடுப்பது என்பது பற்றி கவனம் செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
2026ஆம் ஆண்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 105வது ஆண்டு நிறைவையும், 15வது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. பல்வேறு சீர்திருத்த மற்றும் வளர்ச்சிப் பணிகள் முழுமையாக முன்னெடுத்தப்படுகின்றன. இந்த முக்கியமான காலகட்டத்தில் நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்தியக் கமிட்டியின் ஐந்தாவது முழு அமர்வில், கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிமுறையை மைய கருப்பொருளாக கொண்டு ஆய்வு செய்வது, சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது சொந்தக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நீண்டகால திட்டத்தைக் காட்டுகின்றது. சீனாவின் மிக உயர்மட்டத் தலைவர் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டியின்படி, சீனாவின் விவகாரங்களைச் சிறப்பாக நிர்வகிப்பதற்கான திறவுகோலுக்கு, கட்சியானது மிகமுக்கியமானது. கட்சியின் வெற்றிக்கான திறவுகோல் அதன் சுய ஆட்சிமுறையும், கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிமுறையும் மிகமுக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
