ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் 8ஆவது சட்டமியற்றல் குழு தேர்தலின் முடிவு 8ஆம் நாளில் வெளியிடப்பட்டது. சட்டமியற்றல் குழுவின் 90 உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இத்தேர்தலின் வாக்கெடுப்பில் 161 வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.
நகரவாசிகள் வாக்கெடுப்பில் பங்கெடுப்பது மிகவும் ஊக்கம் தரும் என்று ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் தேர்தல் நிர்வாகக் கமிட்டியின் தலைவர் ஜானி ந்கை ஹொங் 8ஆம் நாள் தெரிவித்தார்.
ஒவ்வொரு முறை தேர்தலும் வேறுப்பட்ட சூழல் மற்றும் அறைகூவல்களை எதிர்நோக்குகிறது. எதிர்காலத்தில் பல்வேறு துறைகளின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்து, நகரவாசிகளின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கைகளை மேலும் சீராக நிறைவேற்ற முயற்சி செய்வேன் என்று இத்தேர்தில் வெற்றி பெற்று தொடர்ந்து உறுப்பினர் பதவி ஏற்றுள்ள ஸ்டார்ரி லீ வை கிங் அம்மையார் தெரிவித்தார்.
ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் 8ஆவது சட்டமியற்றல் குழுவின் பதவிக் காலம் 2026ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நாள் தொடங்கி, 4 ஆண்டுகளாக நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் 8ஆவது சட்டமியற்றல் குழு தேர்தல் நிறைவு
