இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையிலான நேரடி பயணியர் விமான சேவை மீட்கப்படவுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் கோ ச்சியாகுன் 9ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,
இரு நாடுகளுக்கிடையிலான நேரடி பயணியர் விமான சேவை அக்டோபர் இறுதிக்கு முன் மீட்கப்படவுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் நாள் டியன் ஜின் மாநகரில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் இந்திய தலைமை அமைச்சர் மோடியும் எட்டியுள்ள ஒத்த கருத்துகளை இருதரப்பும் நடைமுறைப்படுத்தியதை இது வெளிக்காட்டியது. சீனா மற்றும் இந்தியாவின் 280 கோடிக்கும் மேலான மக்களின் பரிமாற்றத்திற்கு இது துணை புரியும். சீனா, இந்தியாவுடன் இணைந்து, நெடுநோக்கு மற்றும் நீண்டகால கோணங்களிலிருந்து சீன-இந்திய உறவைச் சமாளித்து, இரு நாட்டு மக்களுக்கு நன்மை அளித்து, ஆசிய மற்றும் உலக அமைதியைப் பேணிக்காப்பதற்கும் செழுமையை நனவாக்குவதற்கும் பங்காற்ற விரும்புகின்றது என்றார்.