9ஆவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சிக்கான முதல் தொகுதி பொருட்கள் தயார்

9ஆவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை, ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 26ஆம் நாள், இப்பொருட்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் முதல் தொகுதி பொருட்கள் ஷாங்காய் மாநகரில் அமைந்துள்ள தேசிய கண்காட்சி மையத்தில் நுழைந்துள்ளன. இதில் தொழில் நுட்பச் சாதனங்கள், வேளாண் உற்பத்திப் பொருட்கள், உணவுப் பொருட்கள் முதலியவை முக்கியமாக அடக்கம். இவற்றில் பல பொருட்கள் முதன்முறையாக வெளியிடப்படுகின்றன.

162 நாடுகள், பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகள் கலந்துகொள்ளும் நடப்பு பொருட்காட்சியில், 4142 வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த உள்ளன. இப்பொருட்காட்சியில்  நிறுவனங்களுக்கான கண்காட்சி பரப்பளவு 3 இலட்சத்து 70 ஆயிரம் சதுர மீட்டரைத் தாண்டுவது இதுவே முதன்முறையாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author