தைவான் தொடர்பான தனது கருத்துக்களை ஜப்பான் திரும்பப் பெற வேண்டும், இல்லையெனில் அனைத்து விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்: சீன வெளியுறவு அமைச்சகம்
சீனப் பெருநிலப்பகுதி தைவான் மீது இராணுவத் தாக்குதல் நடத்தினால், ஜப்பானுக்கு “உயிர்வாழும் அபாயகரமான சூழ்நிலையை” உருவாக்கக்கூடும் என்று ஜப்பானிய தலைமையமைச்சர் சனே தகைச்சி அண்மையில் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஜப்பானிய நாடாளுமன்றக் கூட்டத்தில், தனது கூற்று ஜப்பானிய அரசின் பார்வைக்குப் பொருத்தமானது என்றும், இதனால் தனது கூற்றைத் திரும்ப பெற விருப்பம் இல்லை என்றும் சனே தகைச்சி தெரிவித்தார்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியான் 13ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், ஜப்பான் உடனடியாக பிழையை சரிசெய்து, வெறுப்பூடும் கூற்றுகளைத் திரும்ப பெற வேண்டும். இல்லைவிட்டால், அனைத்து விளைவுகளுக்கும் ஜப்பானால் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஜப்பானின் வரலாற்றில், ஜப்பானின் இராணுவ வெறியர்கள், “உயிர்வாழும் அபாயம்” என்பதை சாக்குபோக்காக கொண்டு வெளிநாட்டு ஆக்கிரமிப்புப் போர்களை தொடங்கினர்.
தற்போது ஜப்பானிய தலைமையமைச்சர் சனே தகைச்சி இதனை மீண்டும் குறிப்பிட்டர். அவரது உண்மையான நோக்கம் என்ன? ஜப்பான் இராணுவவாதாத்திற்குத் திரும்ப போகிறதா?என்று லீன்ஜியான் கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் கூறுகையில், ஜப்பான் இராணுவ முறையில் தைவான் நீரிணை நிலைமையில் தலையிட்டால், அதை ஆக்கிரமிப்பு செயலாக கருதி, சீனா நிச்சயமாக வலுவான எதிர் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று லீன் ஜியான் தெரிவித்தார்.
