தைவான் மீட்கப்பட்டதன் 81வது ஆண்டு நிறைவுக்கான கலந்தாய்வு கூட்டம்

தைவான் மீட்கப்பட்டதன் 81வது ஆண்டு நிறைவு மற்றும் தைவான் மீட்கப்பட்டதன் நினைவுத் தினம் நிறுவப்பட்டதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, அக்டோபர் 25ஆம் நாளில், தொடர்புடைய கலந்தாய்வு கூட்டம் ஃபுச்சியன் மாநிலத் தலைநகர் ஃபுசோவில் நடைபெற்றது. தைவானைச் சேர்ந்த ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போராளிகளின் குடும்பத்தினர்கள், தைவான் நீரிணை இரு கரைகளின் இளைஞர்கள், ஹாங்காங் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் பிரதிநிதிகள், நிபுணர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட சுமார் 200 விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியைச் சேர்ந்த தைவான் பணி அலுவலகம், அரசவையின் தைவான் விவகார அலுவலகத்தின் தலைவர் சோங் டாவ் இதில் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கின் கூற்றின்படி, நீண்டகாலமாக சீனத் தேசத்தின் வரலாற்றில் தைவான் நீரிணை இருகரைகள் பிரிக்கப்பட முடியாததாகப் பதிவேற்றப்பட்டுபள்ளது. தைவான் சுதந்திர சக்திகளின் பிரிவினை நடவடிக்கை மற்றும் வெளிபுற சக்தியின் தலையீட்டை இரு  கரைகளின் உடன்பிறப்புகள் உறுதியாக எதிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார். பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக் கொள்கையையும் நடவடிக்கைகளையும் இவ்வாண்டில் நாங்கள் செயல்படுத்துவோம். இரு கரைகளுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஆழமாக்க வேண்டும். தைவான் மாநிலத்தில் நாட்டுப்பற்றுடைய ஐக்கிய ஆற்றலுக்கு நாங்கள் உறுதியாக ஆதரவளிக்கின்றோம். தாய்நாட்டின் ஒருமைபாட்டை உறுதியாக விரைவுபடுத்தி, சீன தேசத்தின் மறுமலர்ச்சியைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author