2026 முதல் 9 மாதங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு

இவ்வாண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரை, சீனாவிலுள்ள பல்வேறு இடங்களும் துறைகளும், உள்ளூர் நிலைக்கு ஏற்ப புதிய உயர் தர உற்பத்தி திறனை வளர்த்த நிலையில், தொழில்துறை பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

இக்காலகட்டத்தில் வருடாந்திர வருவாய் 2 கோடி யுவானை தாண்டிய நிறுவனங்களின் லாபம், முந்தைய ஆண்டை விட 15.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதம், இவ்வாண்டில் தொடர்ந்து 10 விழுக்காட்டு மேல் நிலைத்து வருகிறது.

இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில், மின்னணுத் துறையின் லாபம் முந்தைய ஆண்டை விட ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. வருடாந்திர வருவாய் 2 கோடி யுவானை தாண்டிய நிறுவனங்களின் லாபம் விரைவாக வளர்வதற்கு இது முக்கியமாக ஆதரவளிக்கிறது. மேலும், வருடாந்திர வருவாய் 2 கோடி யுவானை தாண்டிய உயர் தொழில்நுட்ப உற்பத்தி தொழிலின் லாபம் முந்தைய ஆண்டை விட 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வளர்ச்சி விகிதம், வருடாந்திர வருவாய் 2 கோடி யுவானை தாண்டிய தொழில்துறையின் வளர்ச்சி விகிதத்தை விட 36.5 சதவீத புள்ளிகள் அதிகமாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author