சுவிட்சர்லாந்து கூட்டாட்சி தலைவர் சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்

ஸ்விட்சர்லாந்து கூட்டாட்சி தலைவர் கை பார்மெல் அக்டோபர் 30ஆம் நாள் முதல் நவம்பர் முதல் நாள் வரை சீனாவில் பணி பயணம் மேற்கொள்ள உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் 28ஆம் நாள் அறிவித்தது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில்,

சீனா ஸ்விட்சர்லாந்து கூட்டாட்சி தலைவர் கை பார்மெலினை வரவேற்கின்றது. சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் அவரை சந்தித்து பேசுவார் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், சீனாவுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கும் இடையே புத்தாக்க நெடுநோக்குக் கூட்டாளி உறவு நிறுவப்பட்டதன் 10ஆவது ஆண்டு நிறைவாக இவ்வாண்டு ஆகும். ஸ்விட்சர்லாந்துடன் இணைந்து, நிதானமான மற்றும் சீரான இரு நாட்டுறவைக் கொண்டு, இரு நாட்டு மக்களுக்கு மேலும் அதிகமான நலன்களை உருவாக்கவும், இரு தரப்புகளின் நிறுவனங்களுக்கு கூடுதல் முன்னுரிமைகள் மற்றும் வசதிகளை வழங்கவும், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகமான உறுதித்தன்மையை ஊட்டவும் வேண்டும் என்று சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author