காசாவில் உடனடி, நிபந்தனையற்ற மற்றும் நிரந்தரமான போர் நிறுத்தம் அடைவது தொடர்பான தீர்மானம் ஒன்று ஐ.நா. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஐ.நா. பொதுப் பேரவை டிசம்பர் 11ஆம் நாள் நடத்திய அவசர சிறப்புக் கூட்டத்தில், இந்த தீர்மானத்திற்கு 158 ஆதரவு வாக்குகளும் 9 எதிர்ப்பு வாக்குகளும் கிடைத்துள்ளன. மேலும், 13 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.
இதில், அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்ப்பு வாக்குகள் அளித்துள்ளன. மேலும் அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டின் அக்டோபரில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மோதல் ஏற்பட்டது முதல் தற்போது வரை, காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட 45ஆயிரம் பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர் என்று காசா சுகாதாரத் துறை 10ஆம் நாள் புள்ளிவிவரங்களை வெளியிட்டது.