கியூபா மீதான முற்றுகையை அமெரிக்கா நிறுத்த வேண்டும்:சீனா

கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதார, வணிகம் மற்றும் நிதி முற்றுகையை நிறுத்தும் அவசியம் எனும் கருப்பொருட்களில் ஐ.நா பொது பேரவை 27ஆம் நாள் தொடங்கிய விவாதக் கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூசொங் உரை நிகழ்த்துகையில், கியூபா மீதான முற்றுகையையும் நிர்ப்பந்தத்தையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், மனித குலத்திற்கான பொது எதிர்கால சமூகம் எனும் முன்மொழிவு, பல்வேறு நாடுகளின் ஒத்த கருத்துகளாக மாறி வருகிறது. சர்வதேச சமூகம் ஒன்றுபட்டு, கியூபா தனது தேசிய கௌரம் மற்றும் இறையாண்மை சமத்துவத்தைப் பேணிக்காக்கும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். பல்வேறு நாடுகளின் கூட்டு வளர்ச்சிக்கும் ஆதரவளித்து, மனித குலத்தின் தொடர்ச்சியான முன்னேற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.  

Please follow and like us:

You May Also Like

More From Author