சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங், உள்ளூர் நேரப்படி 21ஆம் நாள் பிற்பகல், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், ரஷிய அரசுத் தலைவர் புதினைச் சந்தித்துரையாடினார்.
அப்போது லீச்சியாங் கூறுகையில், இவ்வாண்டில் இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் 2 முறை சந்திப்பு நடத்தி, சீன-ரஷிய உறவு மற்றும் ஒத்துழைப்புகளை ஆழமாக்குவது தொடர்பான அடுத்த வரைவுத் திட்டத்தை வகுத்துள்ளனர். மேலும், ரஷியாவுடன் இணைந்து நெடுநோக்குத் தொடர்புக்களை வலுப்படுத்தி, பரஸ்பர அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, பயனுள்ள ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, இரு நாடுகளின் கூட்டுச் செழுமையை விரைவுபடுத்த சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். பல தரப்பு மேடைகளில் சீனா, ரஷியாவுடனான ஒத்துழைப்புகளை நெருக்கப்படுத்தி வருவதோடு, கூட்டு நலன்களைப் பேணிக்காத்து, நீதி மற்றும் நேர்மையைப் பாதுகாக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
புதின் கூறுகையில், சீனா எப்போதும் ரஷியாவுக்கான மிக உற்ற நண்பராகவும் கூட்டாளியாகவும் விளங்குகிறது. சீனாவுடன் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இவ்வாண்டில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டை சீனா நடத்துவதற்கு ஆதரவளிக்கின்றோம் என்று தெரிவித்தார்.
அக்டோபர் 22ஆம் நாள் முற்பகல், சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங், சீன-ரஷிய தலைமை அமைச்சர்கள் இடையிலான 31வது குறிப்பிட்டக்கால சந்திப்பில் கலந்துகொண்ட பிறகு, சிறப்பு விமானம் மூலம் பெய்ஜிங்கிற்குத் திரும்பியுள்ளார்.
