சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 5ஆவது முழு அமர்வு பற்றிய பொது அறிககை

மத்தியத்துவ கோட்பாட்டைச் செயல்படுத்துவது, கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிமுறைக்கான உள்புறக் கோரிக்கையாகும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஊழியர்களை கண்டிப்பாக நிர்வகிப்பதே, கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிமுறைக்கான திறவுகோலாகும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

உறுதியான அரசியல் அர்ப்பணிப்பு, சிறந்த தொழில்முறைத் திறன், மிகச்சிறந்த பணி நடை மற்றும் கண்டிப்பான ஒழுக்கம் கொண்ட உயர்தர ஊழியர்கள் அணியை நாங்கள் உருவாக்குவோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கட்சியின் முழுமையான மற்றும் கடுமையான சுய ஆட்சிமுறையைச் செயல்படுத்துவதில் பல்வேறு நிலைகளிலும் உள்ள கட்சி அமைப்புகள் முக்கியமாகப் பங்காற்ற வேண்டும். இதனால், பல்வேறு நிலைகளிலும் உள்ள கட்சி அமைப்புகளின் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான கட்டுமானத்தை வலுப்படுத்த வேண்டும். பணி முறைய மேம்படுத்துவது, ஒழுக்கத்தைக் கடுமைப்படுத்துவது ஆகியவை கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிமுறையை முன்னேற்றுவதற்கான பயனுள்ள நடைமுறைகளாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

கட்சி ஊழியர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கான துணிச்சலோ, வாய்ப்போ அல்லது விருப்பமோ இல்லாத நிலைமையை உறுதி செய்ய வேண்டும். இது, கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிமுறைக்கான ஒரு முக்கியமான நெடுநோக்காகவும், ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கான அடிப்படை கோட்பாடாகவும் அமையும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author