உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்க்கும் அரபு நாடுகளின் அரச குடும்பங்கள் மற்றும் கோடீஸ்வர ஷேக்குகளின் ஆடம்பர வாழ்க்கை முறை எப்போதுமே வியப்பிற்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
தங்கக் கட்டிகள், அதிநவீனப் போர் கார்கள், கோடிக்கணக்கில் விலைமதிப்பான அரண்மனைகள் எனப் பல விசித்திரங்களை உள்ளடக்கிய அந்த உலகத்திற்குள் ஒரு சாதாரண வெளிநாட்டுப் பெண் நுழைந்தால் அவளது வாழ்க்கை எப்படி மாறியிருக்கும்? அந்தச் கேள்திக்கான விடையாக தற்போது இணையத்தை உலுக்கி வரும் ஒரு ரசியப் பெண்ணின் கதையும், அவர் வெளிப்படுத்தியுள்ள அரேபிய அரண்மனை ரகசியங்களும் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
துபாயைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர ஷேக் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு அவரது இரண்டாவது மனைவியாக வாழ்ந்து வரும் ரசிய நாட்டைச் சேர்ந்த அந்தப் பெண், தனது அன்றாட வாழ்க்கையைச் சமூக வலைத்தளங்களில் பகிரத் தொடங்கியதிலிருந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
பொதுவாக அரபு நாட்டுப் பெண்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடனும், பர்தா மற்றும் பாரம்பரிய உடைகளுடனும் வெளியில் தலைகாட்டாமல் வாழும் சூழலில், இந்த ரசிய அழகியோ தனக்குக் கிடைக்கும் கோடிக்கணக்கான மதிப்புள்ள வைர நகைகள், பிரைவேட் கார்கள் மற்றும் அரண்மனை போன்ற பிரம்மாண்டமான சொகுசு வில்லாக்களைச் சர்வ சாதாரணமாக வெளிக்காட்டி வருகிறார்.
இந்நிலையில் கணவர் தன் மீது பொழியும் அன்பும், செய்யும் அள்ளிக் கொடுக்கும் பரிசுகளும் எந்த ஒரு சினிமா கதையையும் மிஞ்சும் வகையில் இருப்பதாக அவர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளன.
பலரும் முதல் மனைவிக்கும் இவருக்கும் இடையே என்ன மாதிரியான பனிப்போர் நடக்கிறது என்றும், இந்த ஆடம்பரத்திற்குப் பின்னால் ஏதேனும் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பி வந்தாலும், அந்தப் பெண் அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது கனவு உலக வாழ்க்கையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
இஸ்லாமிய சட்ட விதிகளின்படி ஷேக்குகள் தங்களது மனைவியர் அனைவருக்கும் சமமான உரிமைகளையும் சொகுசு வாழ்க்கையையும் வழங்க வேண்டும் என்ற விதியின் கீழ் இவருக்கு அளிக்கப்படும் அந்தஸ்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எளிய பின்னணியில் இருந்து வந்து எதிர்பாராத விதமாக அரபு நாட்டின் ராணியைப் போல வலம் வரத் தொடங்கியுள்ள இந்த ரசியப் பெண்ணின் கதை, தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளதுடன், கோடீஸ்வரர்களின் அந்தரங்க உலகை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
See this Instagram video by @emirati_family https://t.co/NCdoG6CIu6
“>
