சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், மத்திய வெளியுறவு விவகார ஆணைய அலுவலகத்தின் இயக்குநருமான வாங்யீ 26ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்க-சீன உறவுக்கான தேசிய கமிட்டியின் நிர்வாக துணைத் தலைவர் கிரீன்பெர்கைச் சந்தித்துரையாடினார்.
சமமான மற்றும் ஒன்றுக்கொன்று மதிப்பளிக்கும் கோட்பாடுகளின் அடிப்படையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வை நடத்த சீனா விரும்புவதாக வாங்யீ இச்சந்திப்பின் போது தெரிவித்தார்.
கிரீன்பெர்க் கூறுகையில், அதிகரித்து வரும் அபாயங்கள் மற்றும் உறுதியற்ற தன்மையை உலகம் எதிர்கொண்டு வரும் நிலையில், அமெரிக்காவும் சீனாவும் தொடர்பை விரிவாக்கி தத்தமது அமைதி மற்றும் செழுமையை நனவாக்க வேண்டும்.
இதற்கு அமெரிக்க-சீன உறவுக்கான தேசிய கமிட்டியும் நானும் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.