ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்கா இந்தியா மீது 50% வரிகளை அறிவித்துள்ள தருணத்தில், ரஷ்யா அதிபர் புடினின் வருகை குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இறுதிக்குள் பிரதமர் நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்திப்பார் என்று இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், விளாடிமிர் புடினின் வருகைக்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
உக்ரைன் போர் குறித்து அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் சமீபத்தில் நடந்த சந்திப்பு குறித்தும் பிரதமர் மோடியுடன் புடின் கடந்த திங்களன்று தொலைபேசியில் உரையாடியது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியை சந்திக்க இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய அதிபர் இந்தியா வருகிறார்
