செனகல் குடியரசின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், சீன தேசிய விளையாட்டுத் தலைமைப் பணியகத்தின் தலைவருமான காவ்சிதான் அக்டோபர் 31ஆம் நாள் அந்நாட்டுத் தலைநகர் டாக்காரில் 4ஆவது இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொண்டார். அன்று காலை, செனகல் அரசுத் தலைவர் ஃபாயே, காவ்சிதானைச் சந்தித்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, செனகல்-சீன உறவை வெகுவாகப் பாராட்டி, சீனா செனகலின் மிக முக்கிய கூட்டாளிகளில் ஒன்றாகும் என்று ஃபாயே தெரிவித்தார். நீண்டகாலமாக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் சீன அரசும் செனகல் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கும் இவ்விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கும் வழங்கிய ஆதரவுக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.
