சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 5வது முழு அமர்வில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிமுறையில் ஊன்றி நிற்பது தொடர்புடைய முக்கிய பிரச்சினைகள் பற்றிய தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கட்சி மத்திய கமிட்டி புதிய யுகத்தில் கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிமுறைப் பணியில் பெற்றுள்ள மாபெரும் சாதனைகளையும், மதிப்புள்ள அனுபவங்களையும் தொகுத்து தற்காலத்திலும் வருங்காலத்திலும் கட்சியின் ஆளுமை, கட்சியின் கட்டுமானம் ஆகியவற்றில் எதிர்நோக்கும் நிலைமையையும் கடமையையும் ஆய்வு செய்து இத் தீர்மானம் கீழ்வரும் பணிகளை முன்வைத்தது.
இதில் கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிமுறைப் பணியின் முக்கியத்துவமும் அவசரமும் சுட்டிக்காட்டப்பட்டு, ஒட்டுமொத்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கட்சியின் குறிக்கோளை பின்பற்றி, விசுவாசத்தை மனவுறுதியாக உருவாக்கி, கட்சிக்கு பிரமாணிக்கமாக இருந்து மக்களுக்குச் சேவை புரிந்து, ஊழலின்றி செயல்பட வேண்டும் என்று இதில் சுட்டிக்காட்டப்பட்டது.
மையத்துவ அதிகாரம் என்ற ஜனநாயகக் கோட்பாட்டைக் கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
சீனத் தேசத்தின் மறுமலர்ச்சிக் கடமையை ஏற்கக் கூடிய உயர் தர ஊழியர் அணியை திரட்ட வேண்டும்.
செயல்பாட்டுத் திறனைக் கொண்ட முழுமையான கட்சி அமைப்புமுறையை உருவாக்க வேண்டும்.
கட்சியின் ஒழுங்குமுறையை இடைவிடாமல் மேம்படுத்த வேண்டும்.
ஊழலின்றி நீதி தவறாது பணிபுரிவதிலும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை உறுதியாக செய்ய வேண்டும்.
கட்சியின் விதிமுறைக் கட்டமைப்பை வலுபடுத்தி, விதிகளின்படி கட்சியை நிர்வகிக்க வேண்டும் என்று இந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.
தோழர் ஷி ச்சின்பிங்கை மையமாகக் கொண்டு நெருக்கமாக ஒன்றுபட்டு, ஷி ச்சின்பிங்கின் புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசச் சிந்தனையைப் பன்முகங்களிலும் நடைமுறைபடுத்தி, நவீனமயமாக்கத்துக்கான சீன வழியின் மூலம் சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சிக்காக மனம் ஒருமித்து அயராது போராடுவோம் என்று இத்தீர்மானம் கூறுகின்றது.
