சி.பி.சி 20ஆவது மத்திய கமிட்டியின் 5வது முழு அமர்வின் சாதனைக்குப் பாராட்டுக்கள்: உலக நாடுகளின் கட்சிகள்

சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 5வது முழு அமர்வு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பல்வேறு நாடுகளின் கட்சிகள் வாழ்த்து தெரிவித்து, கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை விடாமுயற்சியுடன் பன்முகங்களிலும் வலுப்படுத்தும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவங்களையும் சாதனைகளையும் உயர்வாக மதிப்பிட்டுள்ளன.

பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங்கின் தலைமையில் பொது மக்களுடன் நெருக்கமாக இணைக்கப்பட்ட ஊழலற்றக் கட்சி உறுப்பினர் அணி ஒன்று சீனாவில் நிறுவப்பட்டது என்று இலங்கை JVPவின் பொதுச் செயலாளர் சில்வா தெரிவித்துள்ளார்.

ஒரு அரசியல் கட்சி சொந்தமான கட்டுமானத்தில் கவனம் செலுத்தி சுய சீர்திருத்தத்தில் துணிவுடன் ஈடுபட்டால் தான், நாட்டின் நீண்ட கால அமைதி, நிதானம் மற்றும் செழிப்பான வளர்ச்சிக்கு வழிவகுக்க முடியும் என்று கட்சி ஆக்கப்பணிக்கான ஷி ச்சின்பிங்கின் சிந்தனை கூறுவதாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தலைமை அமைச்சருமான நீபால் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author