சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியன் ஜூலை 19ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாண்டின் முற்பாதியில் சீனப் பொருளாதார நிலைமை குறித்து செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்தார்.
அவர் கூறுகையில், இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி அளவு, 21 லட்சம் கோடி அமெரிக்க டாலரை முதன்முறையாக தாண்டியது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.1 விழுக்காடு அதிகமாகும். சில பொருளாதார குறியீடுகளின் அதிகரிப்பு விதிகம், பத்து விழுக்காட்டுக்கு மேலாகும். வெளிநாட்டு வர்த்தகத்தின் வலிமையான அதிகரிப்பினால், சர்வதேச நாணய நிதியம் புதிதாக வெளியிட்ட உலகப் பொருளாதார முன்னாய்வு அறிக்கையில், சீனப் பொருளாதார அதிகரிப்புக்கான மதிப்பீட்டை 5 விழுக்காடாக உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 26 ஆயிரத்து 870ஐ எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 14.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆக்கத் தொழில் உண்மையாக பயன்படுத்திய அன்னிய முதலீட்டுத் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.4 விழுக்காடு அதிகம். உலகளாவிய சரக்கு வர்த்தகத்தில் மிக பெரிய நாடு என்ற தகுநிலையை சீனா தொடர்ந்து 7 ஆண்டுகளாக நிலைநிறுத்தி, சர்வதேச சந்தையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் பங்கு தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் வகிக்கிறது என்று தெரிவித்தார்.