தங்கம் விலையில் திடீர் சரிவு…. இன்று என்ன ரேட் தெரியுமா….?

Estimated read time 0 min read

தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்து ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,17,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 50 ரூபாய் குறைந்து, 14,730 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

மறுபுறம், தொழில்துறை மற்றும் சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகத் தேவை கொண்ட வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் காணப்படவில்லை. நேற்று விற்கப்பட்ட அதே விலையிலேயே நீடிக்கும் வெள்ளி, இன்று ஒரு கிலோ 2,95,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை திடீரென சவரனுக்கு 400 ரூபாய் சரிந்திருப்பது, வரும் நாட்களில் நகை வாங்கத் திட்டமிட்டிருக்கும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

You May Also Like

More From Author