சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 57ஆவது தலைவர் கூட்டம் 24ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் சாவ்லேஜி இதற்குத் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் உயிரினச் சுற்றுச் சூழல் சட்ட வரைவு, தேசிய இனங்கள் ஒன்றுபட்டு முன்னேற்றுவதை விரைவுபடுத்தும் சட்ட வரைவு, தேசிய வளர்ச்சி திட்டச் சட்ட வரைவு ஆகியவற்றின் மீதான பரிசீலனை அறிக்கைகள் கேட்டறியப்பட்டன. மேலும், மீன்பிடித் துறை சட்டத் திருத்த வரைவு, அபாயகரமான வேதிப்பொருள் பாதுகாப்புக்கான சட்டத் திருத்த வரைவு, சிவில் விமான சட்டத் திருத்த வரைவு, தேசிய மொழி மற்றும் எழுத்து அமைப்புச் சட்டத்தின் திருத்த வரைவு, வெளிநாட்டு வர்த்தகச் சட்டத் திருத்த வரைவு உள்ளிட்ட கருத்துகளுக்கான அறிக்கைகளும் இதில் பரிசீலனை செய்யப்பட்டன.
