டிட்வா புயல் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில் கடல் சிற்றம் காரணமாக பொதுமக்கள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடல் வழக்கத்தை விட சிற்றமாகவும், ஆக்ரோஷமாகவும் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கடலில் இறங்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கடலுக்கு செல்லாத மீனவர்கள், தேங்காய்திட்டு துறைமுகத்தில் தங்களின் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
