“தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில்” உருவாகியுள்ள “புதிய மற்றும் சிக்கலான அச்சுறுத்தல்களை” கருத்தில் கொண்டு, மே 7 புதன்கிழமை 244 வகைப்படுத்தப்பட்ட சிவில் பாதுகாப்பு மாதிரிப் பயிற்சிகளை (Mock Drill) அனைத்து மாவட்டங்களிலும் நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த அவசரக்கடிதம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய தீயணைப்பு சேவை, சிவில் பாதுகாப்பு மற்றும் வீட்டுக் காவல்படை இயக்குநரகம் மூலம் அனுப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நடத்திய உயர்மட்டக் கூட்டங்களுக்குப் பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை: மாநிலங்கள் பின்பற்றவேண்டிய முக்கிய நடவடிக்கைகள் என்ன?
