சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் கமிட்டியின் 5ஆவது முழு அமர்வில், கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியை விடா முயற்சியுடன் முன்னெடுப்பது தொடர்பான முக்கியப் பிரச்சினைகள் குறித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தின் மிக முக்கியமான சாதனையாக இது கருதப்படுகிறது. விடா முயற்சி என்பதால் கொண்டு வரப்பட்ட உத்திநோக்கு உயர்வு இந்த பணித்திட்ட ஆவணத்தின் புத்தாக்கமாகும்.
விடா முயற்சியின் மைய தர்க்கம், கட்சியின் சுய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி இல்லை என்பதாகும். கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியானது, குறுகிய கால திருத்தம் அல்லது சிறப்பு இயக்கம் என்பதற்கு மாறாக, உலகளவில் அரசியல் கட்சிகளின் ஏற்றத்தாழ்விலிருந்து படிப்பினையைப் பெற்று, நீண்டகால ஆட்சியில் ஏற்படும் சவால்களைச் சமாளிப்பதற்கான உத்திநோக்கு அமைப்புமுறை சார் ஏற்பாடாகும்.
கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியை விடா முயற்சியுடன் முன்னெடுப்பதற்காக, வழக்கமான நீண்டகால ஆட்சி, உத்திப்பூர்வ முன்முயற்சி, அமைப்புமுறை சார் நீண்ட பயன் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும்.
கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியை விடா முயற்சியுடன் முன்னெடுப்பதற்கான உத்திநோக்கு கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் வகையில், கட்சி எழுச்சியை வலுப்படுத்துவதை அடிப்படையாக வைப்பது, ஊழியர் மீதான மேற்பார்வையை கண்டிப்பான முறையில் மேற்கொள்வது, முழு துறைகளிலும் கால ஓட்டத்துக்கேற்ப செயல்படுவது, கட்சி எழுச்சி, கட்சி நடத்தை, கட்சி ஒழுங்கு, ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றை ஒன்றிணைப்பது, அமைப்புமுறை மூலம் அடிப்படையை வலுப்படுத்துவது ஆகிய ஏற்பாடுகள் முக்கிய சாதனையாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
