பெய்ஜிங்கில் நடைபெற்ற 37ஆவது ஏபெக் அமைச்சர் நிலை கூட்டம்

Estimated read time 1 min read

ஏபெகின் 37ஆவது வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் 3ஆம் நாள் காணொளி வழியாக பெய்ஜிங்கில் நடைபெற்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீயும், சீன வணிக அமைச்சர் வாங் வென்தாவும் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.

இதில் வாங்யீ கூறுகையில், ஆசிய-பசிபிக் பொது சமூகக் கட்டுமானம் பற்றி சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்துள்ள முக்கிய கண்ணோட்டம், புதிய சூழ்நிலையில், இப்பிராந்திய ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கு வழிகாட்டியுள்ளது.  ஆசிய-பசிபிக் பொது சமூகக் கட்டுமானத்தை மேலும் ஆழமாக்கும் வகையில் இவ்வமைப்பின் பல்வேறு உறுப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்ற சீனா விரும்புவதாக கூறினார்.

ஏபெகின் “சீன ஆண்டு” எனும் காலக்கட்டத்தில் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளின் முன்னேற்றங்களை இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு தரப்புகளின் பிரதிநிதிகள் ஆக்கப்பூர்வமாக மதிப்பிட்டுள்ளனர். இவ்வமைப்பின்  தலைவர்களின் உச்சிமாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதைக் கூட்டாக ஊக்குவிக்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author