சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 16ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கெடுப்பதை முன்னிட்டு, சீன-ரஷிய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஒரு பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சி அக்டோபர் 22ஆம் நாள் ரஷியாவின் கசான் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, சீன ஊடகக் குழுமம், ரஷிய தேசிய தொலைக்காட்சி மற்றும் ஒலிபரப்பு நிறுவனம் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது.
சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹைசியோங் உரை நிகழ்த்திய போது கூறுகையில், இவ்வாண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். இதுவும் சீனாவுக்கும் ரஷியாவுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75வது ஆண்டு நிறைவாகும். மேலும் சீன-ரஷிய பண்பாட்டு ஆண்டு என்ற நிகழ்ச்சியின் துவக்க ஆண்டாகும். இரு நாட்டு அரசுத் தலைவர்களின் நெடுநோக்கு தலைமையில், சீன-ரஷிய உறவு வரலாற்றில் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றது. இது, புதிய ரக பெரிய நாட்டுறவுக்கு மாதிரியாக திகழ்கின்றது. சீன-ரஷிய பாரம்பரிய நட்புறவு வளர்ச்சி மற்றும் மக்களிடையே பரஸ்பரப் புரிந்துணர்வை முன்னேற்ற சீன ஊடகக் குழுமம் எப்போதும் பாடுபட்டு வருகின்றது என்றார்.