செப்டம்பர் 3ஆம் நாள் நடைபெற்ற சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நினைவுக் கூட்டம் வெளிநாட்டு செய்தி ஊடகங்களின பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உரைநிகழ்த்திய போது, அமைதி என்பதை பன்முறையாகக் குறிப்பிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கவனித்துள்ளன. அமைதியை நேசித்துப் பேணிக்காக்கும் சீன மக்களின் மனவுறுதியை உலகத்துக்கு இது வெளிக்காட்டியுள்ளது.
அமைதியான வளர்ச்சிப் பாதையில் ஊன்றி நிற்க வேண்டும் என்பது சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த தலைசிறந்த ஞானமாகும்.
1950ஆம் ஆண்டுகள் முதல், பஞ்ச சீல கோட்பாடுகள் என்ற கோட்பாட்டில் சீனா உறுதியாகப் பரப்புரை செய்து வருகிறது. ஐ.நா அமைதிக் காப்பு நடவடிக்கைகளுக்குச் சீனா 50ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை அனுப்பியுள்ளது. மேலும், உலகின் நூறு ஆண்டுகளில் காணாத மாற்றங்களை எதிர்கொண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உலக பாதுகாப்பு முன்மொழிவை முன்வைத்தார். உலகத்துக்கு நிதானம் மற்றும் உறுதித் தன்மையைக் கொண்டு வரச் சீனா எப்போதும் முயற்சி செய்து வருகிறது.
2ஆம் உலக போர் வெற்றி பெற்ற சாதனைகளைப் பேணிக்காக்கவும், மனிதகுல பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றி உலகம் நிலையான அமைதி மற்றும் நிதானத்தை நனவாக்கச் செய்யவும், சீன மக்கள் உலக மக்களுடன் இந்த மாபெரும் வெற்றியை நினைவுக் கூர்ந்தனர்.