“சென்னைக்கு வரப்போகும் மெகா ஸ்போர்ட்ஸ் திருவிழா!”..

Estimated read time 1 min read

வரவிருக்கும் 2029-ஆம் ஆண்டுக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளைச் சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி தற்போது கிடைத்துள்ளது. சர்வதேச விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் பெயரைக் மேலும் உயர்த்தும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்பு, விளையாட்டுத் துறை வட்டாரங்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய தடகளக் கூட்டமைப்பின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகளும் இந்தியத் தடகளச் சங்க நிர்வாகிகளும் இணைந்து இந்தப் போட்டியைச் சென்னையில் நடத்த வேண்டும் என்று தீவிரமான கோரிக்கையை முன்வைத்தனர். நமது மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெற்றிகரமாகப் பெரிய அளவிலான போட்டிகளை நடத்திய அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, ஆசிய தடகளக் கூட்டமைப்பும் இந்தக் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம், ஆசிய நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்தப் பெருமைமிக்க போட்டி சென்னை மண்ணில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் மைதானத்தை நவீனப்படுத்தும் பணிகளைத் தமிழக அரசு விரைவில் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாட்டு விளையாட்டுப் பிரியர்கள் மத்தியில் இந்தச் செய்தி மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author