இஸ்ரோவின் ககன்யான் விண்வெளி திட்டத்துக்கு தேவையான சாதனம் – கோவையில் தயாரிப்பு!

Estimated read time 1 min read

இஸ்ரோவின் ககன்யான் விண்வெளி திட்டத்துக்கு தேவையான முக்கிய பாதுகாப்பு சாதனத்தை, கோவையில் உள்ள எல் அண்டு டி நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘Crew Escape Ogive Shroud’ என்ற சாதனத்தின் நான்காவது தொகுப்பு, இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை ஆலையில் தயாரிக்கப்பட்ட இந்த சாதனம், பல்வேறு தர பரிசோதனைகளுக்கு பின், திட்டமிட்ட காலத்துக்கு முன்பே வழங்கப்பட்டுள்ளது.

‘க்ரூ எஸ்கேப் ஓகிவ் ஷ்ரவுட்’ என்பது ராக்கெட்டில் விண்வெளி வீரர்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கூம்பு வடிவ பாகமாகும்.

ராக்கெட் புறப்படும்போது அவசரநிலை ஏற்பட்டால், விண்வெளி வீரர்கள் இருக்கும் பகுதியை பாதுகாப்பாக பிரித்து வெளியேற்றும் ‘க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தில்’ இந்த பாகம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கு தேவையான முக்கிய பாகங்களை தயாரிப்பதில் கோவை சிறு தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இது குறித்து கோவை மாவட்டச் சிறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் ரங்கசாமி கூறுகையில், விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கு தேவையான முக்கிய பாகங்களை தயாரிப்பதில் கோவை சிறு தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், கொடிசியா உறுப்பு நிறுவனங்கள் , பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசு விண்வெளி திட்டங்களுக்கு தேவையான உதிரிபாகங்களை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author