கூட்டணி ஆட்சிக்கு அழைத்த நெதன்யாகு… ஐசன்கோட் விளாசல்…!! 

Estimated read time 0 min read

இஸ்ரேல் நாட்டில் அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைப்பதற்கான போதிய இடங்கள் கிடைக்காததால், புதிய அரசை உருவாக்குவதில் தொடர் முட்டுக்கட்டை நிலவி வருகிறது.

மொத்தம் 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஆட்சியைப் பிடிக்க 61 உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயமாகும். ஆனால், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைமையிலான கூட்டணி 53 இடங்களை (46+7) மட்டுமே பெற்றுள்ளது. மறுபுறம், முன்னாள் ராணுவத் தலைவரான காடி ஐசன்கோட் தலைமையிலான அணி 48 இடங்களைக்கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான ஆதரவைத் திரட்டும் நோக்கில், 19 இடங்களைக் வைத்துள்ள அரபு சமூகக் கட்சிகளுடன் இணைந்து செயலாற்ற ஐசன்கோட் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக நெதன்யாகு தனது பதவியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழலில் கூடிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் உரையாற்றிய நெதன்யாகு, “ஈரான் தரப்பில் இருந்து நாட்டிற்கு வரும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. இதனை நாம் உறுதியுடன் எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் உள்ளடங்கிய தேசிய ஒற்றுமை அரசை உருவாக்க வேண்டும். அணுஆயுத பலம் கொண்ட ஈரானின் நடவடிக்கைகளை சகித்துக் கொள்ளுமாறு சர்வதேச அளவில் நமக்கு அழுத்தங்கள் உருவாகலாம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நெதன்யாகுவின் இந்த உரையைத் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்த காடி ஐசன்கோட், “வெளியேறத் தயார் நிலையில் இருக்கும் ஒரு பிரதமரின் இந்த பேச்சு முற்றிலும் ஏமாற்றமளிக்கிறது. அரசியல் லாபத்திற்காக இத்தகைய முக்கிய தளத்தைப் பயன்படுத்தி பிரிவினையையும் வெறுப்பையும் தூண்ட முயல்கிறார். அவர் இன்னும் ஒரு நிமிடம் கூட அந்த உயர் பதவியில் நீடிப்பதற்குத் தகுதியற்றவர்” எனச் சாடினார்.

கூட்டணி அமைப்பதற்கான இழுபறி நீடிப்பதால், இஸ்ரேல் அரசியலில் அடுத்தகட்ட நகர்வு குறித்துப் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author